Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 14 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு நைஜீரியாவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப்...

14 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு நைஜீரியாவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர்.

137
0

சவூதி அரேபிய சிறப்பு அறுவை சிகிச்சைக் குழு 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்தனர். 36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு மற்றும் பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்ட இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

ராயல் கோர்ட்டின் ஆலோசகரும், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) மேற்பார்வையாளருமான மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், சவுதி தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும்,மேலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிப்பதற்கான சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இது 56வது ஆபரேஷன் என்றும், கடந்த 33 ஆண்டுகளில் சவுதி திட்டம் 23 நாடுகளைச் சேர்ந்த 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது என்றும் அவர் விளக்கினார்.

டாக்டர். அல்-ரபீயா, அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து, இந்த சாதனை மக்கள் எங்கிருந்தாலும் மக்களுக்கு உதவுவதற்கான புத்திசாலித்தனமான தலைமையின் ஆர்வத்தை பிரதிபலிப்பதோடு,சவூதி விஷன் 2030ன் நோக்கங்களுடன் சவூதியின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும் இணைகிறது என்றும் அவர் கூறினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோருக்கு இந்த அறுவை சிகிச்சை முடிவிற்கு சவூதி அரேபிய திட்டத்தால் ஆதரவளித்த மருத்துவ குழுவின் சக உறுப்பினர்கள் சார்பாக மேலும் அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!