சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் (CST) கவர்னர் முகமது அல்தமிமி சவுதி அரேபியா மிகப்பெரிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சந்தைகளில் ஒன்று எனவும், சவூதி அரேபியாவில் இதன் அளவு SR154 பில்லியன் ஆகும், இது சவூதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% ஆகும்,” என்று அவர் சவுதி சிறப்பு பொருளாதார மண்டல முதலீட்டு மன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.
தொடர்புகள், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் நிறுவப்பட்டதிலிருந்து தொழில்நுட்பத்தைப் பற்றி குறிப்பாகப் பேசும்போது, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தொழில்நுட்பத் துறையின் அளவு இப்போது தகவல் தொடர்புத் துறையின் அளவை விட அதிகமாக இருப்பதை முதன்முறையாகக் கவனித்து தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையானது SR81 பில்லியனை எட்டியுள்ளது, இது தொலைத்தொடர்பு துறையின் அளவை விட அதிகமாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.