இந்த ஆண்டு மார்ச் மாதம் 123 புதிய தொழில்துறை உரிமங்களை தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சகம் (எம்ஐஎம்) வழங்கியுள்ளது.உணவுப் பொருட்கள் (19), ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்(15), உலோக வேலை செய்யும் பொருட்கள் (14 உரிமங்கள்), உலோகம் அல்லாத கனிம பொருட்கள் (12) மற்றும் இரசாயன பொருட்கள் (11) ஆகியவை உரிமம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து மார்ச் இறுதி வரை 332 தொழில்துறை உரிமங்களை MIM வழங்கியுள்ளது. 10,825 தொழிற்சாலைகளைக் கணக்கிட்டுள்ளது, அவை செயல்பாட்டிலும், கட்டுமானத்திலும் உள்ளது. இதற்கான மொத்த முதலீட்டு அளவு ரியால்1.4 டிரில்லியன் ஆகும்.
புதிய தொழில்துறை உரிமங்களில் சிறு நிறுவனங்கள் 86.99% ஆகவும், நடுத்தர நிறுவனங்கள் 13.01% ஆகவும் உள்ளன. வழங்கப்பட்ட மொத்த உரிமங்களில் தேசிய முதலீடுகள் அதிகபட்சமாக 73.17% ஆகவும், வெளிநாட்டு முதலீடுகள் 15.45% ஆகவும், கூட்டு முயற்சிகள் 11.38% ஆகவும் பெற்றன.
56 தொழிற்சாலைகள் மார்ச் மாதத்தில் ரியால் 959 மில்லியன் முதலீட்டுடன் உற்பத்தியைத் தொடங்கியதாக MIM இன் தேசிய தொழில்துறை மற்றும் சுரங்கத் தகவல் மையம் அறிவித்துள்ளது.
புதிய உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், 94.64% பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்துறை உரிமஙகள் 12 நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டது, ரியாத்துக்கு 46, கிழக்கு மாகாணம் மற்றும் மக்காவுக்கு 29 மற்றும் 18, காசிமுக்கு 11, ஹெயில் 6, ஆசிர் மற்றும் ஜசானுக்கு 3 வழங்கப்பட்டது.
தபூக் , மதீனாவிற்கு 2 , அல்-ஜூஃப், அல்-பஹா மற்றும் வடக்கு எல்லை ஆகியவை தலா ஒரு உரிமத்தையும் பெற்றது. மார்ச் மாதத்தில் 10,500 புதிய வேலைகளைத் தொழில் துறை உருவாக்கியுள்ளது; இதில் 7,255 வேலைகள் சவூதி குடிமக்களுக்குச் சென்றது. புதிய தொழில்துறை முதலீடுகள் மற்றும் துறையில் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் நாட்டின் தொழில்துறை துறையில் நுண்ணறிவை வழங்குகிறது.