Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 102,600 ஒழுங்குபடுத்தப்பட்ட மருத்துவ மாத்திரைகள் கடத்தும் முயற்சி முறியடிப்பு.

102,600 ஒழுங்குபடுத்தப்பட்ட மருத்துவ மாத்திரைகள் கடத்தும் முயற்சி முறியடிப்பு.

154
0

நஜ்ரான் பகுதியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (ஜிடிஎன்சி), மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்ட 102,600 மாத்திரைகளைக் கடத்த முயன்றதை முறியடித்துள்ளது.

மாத்திரைகளைக் கடத்த முயன்ற 3 ஏமன் நாட்டவர்களைக், எல்லைக் காவல்படையின் பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, கைது செய்துள்ளதாக ஜிடிஎன்சி தெரிவித்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து பணத்தையும் கைப்பற்றியுள்ளதாக GDNC கூறியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் பதிவு செய்தபின் வழக்கு பொது வழக்கறிஞருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, GDNC உறுதிப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் அல்லது ஊக்குவிப்பது தொடர்பாக ஏதெனும் தகவல் தெரிவிக்க, மக்கா, ரியாத் மற்றும் அல்-ஷர்கியா பகுதி குடிமக்கள் 911 என்ற எண்ணையும், சவூதி அரேபியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 999 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்குமாறு பாதுகாப்பு முகமைகள் வலியுறுத்தியுள்ளது. புகார்கள் GDNC இன் எண்: 995 மற்றும் மின்னஞ்சல்: 995@gdnc.gov.sa இணையதளங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!