குழந்தைகள் புத்தகங்கள், அறிவியல், இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சாரம் துறைகளில் பல்வேறு புத்தகங்களையும்,
சவூதி அரேபியா மற்றும் அதன் நிறுவனர் மன்னர் அப்துல்அஜிஸ் அல் சவுத், மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் பயணிகளின் படைப்புகளை மையமாகக் கொண்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கிங் அப்துல்அஜிஸ் பொது நூலகம் மொழிபெயர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்., 30ல் கொண்டாடப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தில், நூலகம் மொழிபெயர்த்த முக்கியமான புத்தகங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், கொரியன், இந்தி, உருது, செக், துருக்கியம், ரஷ்யன், ஸ்பானிஷ், ஜப்பானிய மற்றும் சீனம் போன்ற பல சர்வதேச மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை
மொழிபெயர்ப்பாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு 1953 இல் நிறுவப்பட்டது. சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் 1991 முதல் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 30, 2017 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளை முதன்முறையாக அங்கீகரித்துக் கொண்டாடியது.





