சவூதி அரேபியா 1 டிரில்லியன் மதிப்புள்ள தொழில்துறை முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சரும், சவூதி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான பந்தர் அல்-கொராயேஃப் உறுதிப்படுத்தினார்.
ரியாத்தில் நடந்த “மேட் இன் சவுதி எக்ஸ்போ” கண்காட்சியின் இரண்டாம் பதிப்பின் தொடக்க விழாவில் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், சவூதி அரேபியாவில் வலுவான தொழில்துறை தளங்கள் உள்ளதாகவும், மேலும் இது மேட் இன் சவூதி திட்டத்தின் வெற்றிக்கான வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது என்றும் அல்-கொராயேஃப் கூறினார்.
இந்தப் பதிப்பில் 100 க்கும் மேற்பட்ட சவூதி நிறுவனங்கள் பங்குபெறுவதோடு 40 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும், இதில் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மற்றும் 1 பில்லியன் ரியால் மதிப்புள்ள தொழில்துறை உள்ளூர்மயமாக்கல் ஒப்பந்தங்கள் அடங்கும்.
24 ஈராக்கிய நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சி அதன் தற்போதைய பதிப்பில் கௌரவ விருந்தினராக ஈராக்கை நடத்துவது சவூதி அரேபியாவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளின் விரிவாக்கத்தை குறிக்கிறது.





