Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 1.3 மில்லியன் வணிகப் பதிவுகளில் 33.7% சவூதிப் பெண்கள்.

1.3 மில்லியன் வணிகப் பதிவுகளில் 33.7% சவூதிப் பெண்கள்.

230
0

சவூதி அரேபியாவில் மொத்த வணிகப் பதிவுகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், 1.3 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதில் 33.7% மற்றும் 38.6% முறையே சவூதி பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்குவர்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பதிவுகளின் விகிதம் 29% எட்டியுள்ளது.

டெலிகேர் மற்றும் டெலிமெடிசின் மையங்கள் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33% வளர்ச்சி அடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.404 பதிவுகளுடன் ரியாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மக்கா (190), கிழக்கு மாகாணம் (66), மதீனா (29) மற்றும் அல்-காசிம் (15) உள்ளது.

ஈ-காமர்ஸ் பதிவுகளின் வளர்ச்சி விகிதம் 12% எட்டியுள்ளது. நிதி தொழில்நுட்ப தீர்வுகள் துறையில், வணிகப் பதிவுகளின் வளர்ச்சி விகிதம் 21% எட்டியுள்ளது.

மூன்றாம் காலாண்டின் இறுதியில் சிறப்பு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் நிரலாக்கத் துறையில் 12 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் துறையில், வளர்ச்சி விகிதம் 60 % எட்டியது, விளையாட்டுக் கல்விக் கூடங்களின் துறையில் வளர்ச்சி 43 % எட்டியுள்ளது. விளம்பர முகவர் துறையின் வளர்ச்சி விகிதம் 19 சதவீதமாக உள்ளது, ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதம் சுமார் 19000 பதிவுகளுடன் 35 % எட்டியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!