2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டடுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலையில் ஏற்படும் காயங்களின் சதவீதம் 6% குறைந்துள்ளதாக சமூக காப்பீட்டுக்கான பொது அமைப்பு (GOSI) அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 6,198 ஆக பதிவாகியிருந்த வேலை காயங்கள் 2023 கடந்த மூன்று மாதங்களில் 5,845 காயங்களாக குறைந்து பதிவாகியுள்ளது. சந்தாதாரர்களின் சதவீதம் 9.35 மில்லியனில் இருந்து 10.9% அதாவது 10.45 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பாலினம், வயது, பகுதி மற்றும் விபத்தின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் வேலை காயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் 222 காயங்களைப் பதிவு செய்த பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்கள் 5,623 காயங்களுடனும் ,30-34 வயதுடையவர்கள் 1,322 வேலை காயங்களையும் பதிவு செய்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்ள பகுதிகளை பொறுத்தவரை, ரியாத் பகுதி 1,783 பணி காயங்களுடன் பட்டியலில் முதலிடத்திலும், அல்-ஷர்கியா 1,056 பணி காயங்களும், மக்கா மற்றும் ஜித்தா 763 பணி காயங்களும் பதிவு செய்துள்ளன.
மேலும் இயந்திரங்களினால் ஏற்படும் காயங்கள் விபத்து வகையின்படி 3,472 வேலை காயங்களுடன் மிக உயர்ந்த இடத்தையும்,வேலையின் போது தவறி விழுந்த 1,556 பேர் காயங்களுடன் இரண்டாவது இடத்தையும்,போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக 542 பேர் காயங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
GOSI 30,000 க்கும் மேற்பட்ட தடுப்பு வருகைகளை நடத்தி அத்துடன் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பணியிடங்களில் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் நிலைகளை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு பாதுகாப்பை அடைவதற்கும் காயமடைந்த சந்தாதாரர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் அதன் கிளைகளில் ஒன்றான தொழில்சார் அபாயங்கள் கிளையை செயல்படுத்தவும்,பண இழப்பீடு மற்றும் மருத்துவ பராமரிப்பு பெறவும் தன் ஆதரவை தெரிவித்துள்ளது.