இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் குறிப்பிடத்தக்களவு வெப்பநிலை அதிகரிக்கும் என சுகாதார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது அல்-அப்துலாலி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அல்-அப்துலாலி பயணிகள் சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படுவதைத் தவிர்க்க குடைகளை பயன்படுத்துதல், போதுமான தண்ணீர் அருந்துதல் மற்றும் சோர்வு மற்றும் வெப்ப அழுத்தத்தைக் குறைக்க சடங்குகளுக்கு இடையில் ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
பயணிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்க அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தேசிய வானிலை ஆய்வு மையம்(NCM) ஹஜ்ஜுக்கான புனிதத் தலங்களில் வெப்பநிலை 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் மற்றும் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது.இது பயணிகளுக்கு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.