சவூதி அரேபியா வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) புள்ளிவிவரங்களைத் தொகுக்க உலகத் தரம் வாய்ந்த வழிமுறையைத் தொடங்க உள்ளது, இது நாட்டின் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
சவூதி முதலீட்டு அமைச்சகம் (MISA), புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT), மற்றும் சவூதி அரேபியாவின் மத்திய வங்கி (SAMA) ஆகியவை நாட்டின் FDI புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் பணியாற்றின.
IMF ஆல் அங்கீகரிக்கப்பட்ட, இந்தப் புதுமையான முறையானது காலாண்டு புள்ளிவிவரங்களை உருவாக்க ஆய்வுகளைப் பயன்படுத்துகிறது, மேலும் வருடாந்திர புள்ளிவிவரங்களுக்கான நிதி அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இது 20 FDI குறிகாட்டிகளை உள்ளடக்கியது.
FDI தரவு சேகரிப்பை மேம்படுத்துவதற்கான சவதியின் தற்போதைய முயற்சிகளுக்கு IMF ஆதரவு தெரிவிக்கிறது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) சர்வதேச தரத்திற்கு இணங்கப் புதிய அமைப்பை உறுதிப்படுத்தியது. சவூதி அரேபியா தொடர்பான தொழில்நுட்ப உதவி அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் அளித்த பரிந்துரைகளுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





