சவூதியில் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற விரும்பும் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பகுதி தலைமையகத்தை ரியாத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், காலக்கெடுவிற்கு இணங்கத் தவறும் நிறுவனங்கள் அரசாங்கத்துடனான ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்று நிதி அமைச்சர் முகமது அல்-ஜதான் அறிவித்தார்.
சவூதி அரேபியா ஜன. 1, 2024க்குள் சவூதி அரேபியாவிற்கு வெளியே தலைமையகத்தைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகள் நடப்பு 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
ரியாத்தில் நடந்த 7வது எதிர்கால முதலீட்டு முன்முயற்சி (FII7) மன்றத்தில் சவூதி இனி உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்தாமல், எண்ணெய் அல்லாத துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் என அல்-ஜதான் மேலும் கூறினார்.





