வெளிநாடுகளில் தனியார் துறை நிறுவனங்களின் நேரடி முதலீடுகளின் பட்டியலைச் சவூதி அரேபிய முதலீட்டு அமைச்சகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை முடிப்பதில் சவூதி முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் சேவைகள் மற்றும் சலுகைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், மற்றும் ஊக்குவிப்பதற்கும் நாட்டில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரம் அமைச்சகம் என்று அவர் கூறினார்.கணக்கெடுப்பில் தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்புடன், எதிர்காலக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், வாய்ப்புகளை அடையாளம் காண்பதிலும், உலகப் பொருளாதார சக்தியாகச் சவூதி அரேபியாவின் நிலையை வலுப்படுத்துவதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியது என்று அல்-ஃபாலிஹ் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்களின் நேரடி முதலீடுகளைப் பதிவு செய்ய நிறுவனத்தின் பெயர், முதலீட்டு ஆண்டின் தொடக்கம், முதலீடு செய்யப்படும் நாட்டின் பெயர், முதலீடு செய்யப்படும் நகரம், துறையின் பெயர், மதிப்பு ஆகியவை அடங்ககிய கேள்வித்தாளை அமைச்சகம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





