Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் வணிக அமைச்சகம் போல் மோசடி செய்யப்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

வணிக அமைச்சகம் போல் மோசடி செய்யப்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

189
0

வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் அல்-ஹுசைன், கடந்த இரண்டு மாதங்களில் வர்த்தக அமைச்சகத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்த 200 க்கும் மேற்பட்ட போலி வலைத்தளங்களை அமைச்சகம் முடக்கியுள்ளது என்று உறுதிப்படுத்தினார். மின்னணு வர்த்தக கவுன்சில் மற்றும் நிரந்தர சைபர் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து கண்காணிப்பு மூலம் அமைச்சகம் இதைச் உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சகம் சார்ந்து இருக்கும் நிறுவன தொடர்புக்கு மூன்று தூண்கள் இருப்பதாக அல் ஹுசைன் சுட்டிக்காட்டினார். அவை வாடிக்கையாளர் சார்ந்த விழிப்புணர்வு, விரைவான பதில் மற்றும் அறிக்கைகளைக் கையாளுதல், வணிகச் சமூகம் சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் தரவு மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் தகவல்களைப் பகிர்தல் ஆகும்.

வணிகப் பதிவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் மூன்றாவது பெரிய பிராந்தியமாகும். கிழக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,36,000ஐ தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு அல்-கோபரில் உள்ள நிறுவன ஆதரவு மையம் வழங்கிய சேவைகள் மற்றும் ஆலோசனைகளால் 5,400க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். கிழக்கு மாகாணம் சவூதி வணிக மையத்தின் மிகப்பெரிய கிளையை உள்ளடக்கியது, வணிகத் துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் 750 சேவைகளை இது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!