Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ரீஃப் சவூதி திட்டம் ஆண்டுதோறும் காபி உற்பத்தியை அதிகரிக்க 61 மில்லியன் ரியால்களை ஒதுக்குகிறது.

ரீஃப் சவூதி திட்டம் ஆண்டுதோறும் காபி உற்பத்தியை அதிகரிக்க 61 மில்லியன் ரியால்களை ஒதுக்குகிறது.

141
0

சவூதியில் காபி துறையை மேம்படுத்துவதில் ‘ரீஃப் சவூதி’ எனப்படும் நிலையான வேளாண்மை கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் முன்னேறி வருகிறது.61 மில்லியன் ரியால் ஆரம்ப முதலீட்டுடன், 2020 ஆம் ஆண்டு முதல்,இந்தத் திட்டத்தால் 3,718 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

2020 இல் 800 டன்னாக் இருந்த உற்பத்தியின் அளவு 2023 ஆம் ஆண்டில் 37% அதிகரித்து 1,485 டன்களாக இருந்தது. காபி உற்பத்தியை 2026 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 7,000 டன்களாக உயர்த்தும் இலக்கை ‘ரீஃப் சவூதி’ திட்டம் நிர்ணயித்துள்ளது.பொருளாதாரத்தில் காபி துறையின் பங்களிப்பை ஒரு இலாபகரமான பணப்பயிராக ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

‘ரீஃப் சவூதி’ திட்டம் சிறந்த விவசாய நடைமுறைகளைப் புகுத்தவும், கழிவுகளைக் குறைக்க புதுமையான அறுவடை நுட்பங்களை ஊக்குவிக்கவும், மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாசன முறைகள், நிதி உதவி மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது.

மாதிரிப் பண்ணைகள் மற்றும் நர்சரிகளுடன் காபி துறையினை மேம்படுத்த அல்-பஹா, ஆசிர் மற்றும் ஜசான் பகுதிகளில் காபி பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி அலகுகளை அமைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!