ரியாத் இந்தியன் சங்கம் சார்பாக பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை அன்று கிங் காலித் மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்ற 23-வது வருட இரத்த தான முகாமில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் கொடுத்தனர்.
முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக அல் மராய் Product Development மேலாளர் முஹம்மத் முஸ்கைத் அலி முனைவர் சபீர் கான், ஐ டி மேனேஜர் சல்மான் காளித், திருமதி. நிஹத் பாத்திமா இரத்த வங்கி மேலாளர் டாக்டர். அப்துல் மோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமினை தொடர்ந்து நடைபெற்ற உள்ளரங்க நிகழ்ச்சியில் ரியாத் இந்தியன் வங்கி துணைத்தலைவர் மாதவன் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சியை தலைமியேற்றார் டென்னி ஜோஸ் யம்மட்ட, தொடர்ந்து இப்ராகிம் சுபுஹான் சிறப்புரையாற்றினார், நிகழ்வில் உமர் குட்டி, அருண்குமரன், ஜார்ஜ், சிவகுமார் கிஷோர், சினில், திரு பிஜு, ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.