சவூதி அரேபியாவின் தலைமையில் அரபு உச்சிமாநாட்டின் அவசர அமர்வு நவம்பர் 11 சனிக்கிழமை ரியாத்தில் நடைபெற இருக்கிறது. பாலஸ்தீனம் மற்றும் சவூதியில் இருந்து அமர்வை நடத்துவதற்கான கோரிக்கையைப் பெற்றதாக அரபு லீக்கின் தலைமைச் செயலகம் செவ்வாயன்று அறிவித்ததாக அல்-ஷார்க் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அரபு லீக்கின் தற்போதைய 32வது அமர்வுக்குச் சவூதி அரேபியா தலைமை தாங்குகிறது.
அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர், ஹோசம் சாக்கி திங்களன்று, காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி விவாதிக்க பாலஸ்தீனம் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து உச்சிமாநாட்டை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையைச் செயலகம் பெற்றதாகத் தெரிவித்தார். அரேபிய உறுப்பு நாடுகளுக்குப் பாலஸ்தீன மற்றும் சவூதி குறிப்பாணைகளை செயலகம் சுற்றறிக்கை அளித்துள்ளதாக அவர் கூறினார்.





