ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும் சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இ-சேவைகளை வழங்குவதற்கும் “ரியல் எஸ்டேட் சந்தை” என்ற தளத்தை நீதி அமைச்சர் வாலிட் அல்-ஷாமானி ரியாத்தில் திறந்து வைத்தார்.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹாவும் கலந்து கொண்டார். ரியல் எஸ்டேட் சந்தையானது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளம் பயனர்கள் தங்கள் விருப்பப்படி எந்தப் புவியியல் பகுதியிலும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளின் மதிப்பு மற்றும் தகவல்களைப் பற்றி அறிய உதவுகிறது. இது அவர்களின் சொத்து போர்ட்ஃபோலியோக்களை நிர்வகிக்கவும், ரியல் எஸ்டேட் அடையாளத்தைப் பயன்படுத்தி பத்திரங்களின் துணைப்பிரிவுகள் மற்றும் இணைப்புகளைச் செய்யவும் அவர்களுக்கு உதவுகிறது. பயனர்கள் srem.moj.gov.sa தளத்தை அணுகி அவர்களின் தனிப்பட்ட அடையாள எண்ணை உள்ளிட்டு, Nafath பயன்பாட்டில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டைச் சமர்பிக்க வேண்டும்.
பிறகு, பயனர்கள் தங்களுக்காக அல்லது பிறருக்கான முகவராகத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான “சிறப்புப் பரிவர்த்தனை”மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாங்குபவர் இல்லாமல் “திறந்த பரிவர்த்தனை” போன்ற பல்வேறு ரியல் எஸ்டேட் வர்த்தக சேவைகளைத் தளம் வழங்குகிறது.இது பயனர்கள் ரியல் எஸ்டேட் சலுகைகளில் ஏலம் எடுக்க அனுமதிய யளிக்கிறது.





