உக்ரைனில் நடக்கும் சட்டவிரோத, நியாயமற்ற போருக்கு எதிராகத் தங்களின் உறுதிப்பாட்டையும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் G7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ரஷ்யாவிற்கு இனி எரிசக்தி கிடைப்பதை ஆயுதமாக்க முடியாது என்பதையும் G7 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற மாநாட்டில், போர்க்களத்தில் ரஷ்யா பயன்படுத்திய முக்கியமான பொருட்கள் அனைத்திற்கும் ஏற்றுமதி மற்றும் வரம்புகள் கட்டுப் படுத்தப்படுவதை குறித்து உறுதிசெய்து நடவடிக்கைகளை விரிவுபடுத்துவோம் என்றும் தலைவர்கள் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
தொழில்துறை இயந்திரங்கள், கருவிகள் ரஷ்யா தன் போர் இயந்திரத்தை உருவாக்கப் பயன்படுத்தும் கருவிகளின் ஏற்றுமதிகளும் இதில் உள்ளடங்கும். ரஷ்யாவின் எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள்மீதான விலை வரம்புகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருப்பதாகத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைனுக்கு தேவையான நிதி, இராணுவ உதவியை வழங்குவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை G7 தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இராணுவ உபகரணங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெறாமல் சமாதானத்தை உணர முடியாது என்றும், ரஷ்யாவின் அணு ஆயுத பயன்பாடு அச்சுறுத்தல்கள் அனுமதிக்க முடியாதவை என்றும் ஜி 7 தலைவர்கள் வலியுறுத்தினர்.