Haramain அதிவேக இரயில்வே நிறுவனம் வர இருக்கின்ற புனித ரமலான் மாதத்தின் உச்ச பருவத்தில் மக்காஹ் மற்றும் மதீனா நகர்களுக்கு இடையே ஒரு நாளைக்கு சுமார் 100க்கும் மேறட்ட பயண சேவைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஓகாஸ்/சவூதி கெஜட்டிற்கு கொடுத்துள்ள செய்தியில் ரயில்வே நிர்வாக வட்டாரங்கள், சவூதியின் King Abdulaziz சர்வதேச விமான நிலையம், ஜெத்தாஹ் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முகமது சர்வதேச விமான நிலையங்களை இணைக்கும் பயணமாகவும் சவூதி வருகின்ற உம்ராஹ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படும் விதத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ரமலான் மாதமானது இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான மாதம், இது வருடாந்திர உம்ரா பருவத்தை உச்சம் அடையச் செய்யும் பருவம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆதாரங்களின்படி, haramain அதிவேக ரயிலில் உம்ராஹ் பயணிகள் மற்றும் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தருபவர்கள் மற்றும் ஜித்தா நகரம் மற்றும் கிங் அப்துல்லா பொருளாதார நகரமான ராபீக் பகுதிகளுக்கு வருகை தந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்ததால் இந்த முழு சேவைகளுடன் கூடிய ஐந்து நிலையங்கள்மூலம், மக்கா மற்றும் மதீனாவை ஜித்தா மற்றும் ராபிக் வழியாக இணைக்கும் ரயில்வே, இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட பயணங்களை 95 சதவீத துல்லியத்துடன் இயக்கியுள்ளது என்பதும் புள்ளி விபரங்களாகும்.
சுலைமானியாவில் உள்ள ஜித்தா நிலையம் பயணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அதிகார்வ பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது, மக்கா மற்றும் ஜித்தா சுலைமானியா இடையே இரு திசைகளிலும் 58 பயணங்களும், சுலைமானியா நிலையம் மற்றும் கிங் abdulaziz சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே 26 பயணங்களும் உள்ளன. மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே Peak நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு பயணங்களும், கிங் abdulaziz சர்வதேச விமான நிலையத்திற்கும் மக்கா நிலையத்திற்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணமும் உண்டு என்றும் அறிவித்துள்ளது.
இந்த இரயில் பயணத்தினால் மக்காஹ்வில் இருந்து மதினாவிற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்த நேரத்தில் சென்றடையலாம் இது கார் மற்றும் பிற வாகனங்களில் செல்லும் நேரத்தை பாதிக்கும் மேல் குறைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.