ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah மொராக்கோவின் ரபாத்தில் விசா மற்றும் பயண தீர்வுகளுக்கான (SVTS) சவுதி நிறுவனத்தின் சவுதி விசா சேவை மையத்தை (TASHEER) திறந்து வைத்தார்.
மொராக்கோவில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தனது சேவைகளை எளிதாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு TASHEER மையம் ரபாத்தின் சௌசி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ரபாத்தில் உள்ள TASHEER மையம் ஒரு நாளைக்கு 250 விண்ணப்பதாரர்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் நுழைவு விசா கோரிக்கைகளைப் பெறுதல், முக்கிய அம்சங்களைப் பதிவு செய்தல் மற்றும் விசா வழங்கப்படும் வரை விண்ணப்பத்தைச் செயலாக்குதல் உள்ளிட்ட சவூதி அரேபியாவிற்கான நுழைவு விசாவைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொராக்கோவிற்கான சவூதி அரேபியாவின் தூதர் அப்துல்லா அல்-குரைரி, மொராக்கோ தலைநகரில் இந்த மையத்தைத் திறப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் மொராக்கோவிலிருந்து வரும் பார்வையாளர்களுக்குச் சேவை செய்யும் அனைத்தையும் மேம்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
சவூதி சுற்றுலா ஆணையத்தின் CEO, Fahad Hamid Al-Din, விசா பெறுவதற்கும், புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கும், நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும், சவூதியில் உள்ள சுற்றுலாத் துறையின் வசதிகளை அனுபவிப்பதற்கும் இந்தச் சுற்றுலா அமைப்பு செயல்படும், என்று கூறினார்.





