அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சவுதி அரேபியாவின் சுற்றுலா தூதராகத் தனது இரண்டாவது பயணமாகத் தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியா வந்தடைந்தார்.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப்,மெஸ்ஸியை வரவேற்று,சவுதி அரேபியாவில் தனது இரண்டாவது விடுமுறைக்கு வந்துள்ள சவுதி சுற்றுலாத் தூதர் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
அவர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பேரீச்சம்பழ தோப்புகளைக் காட்டும் இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் இரண்டு நாட்களில் இந்த இடுகை 5 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் கிட்டத்தட்ட 50,000 கருத்துகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.