Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மின்னனு-அரசு சேவைகளில் முதலிடத்தில் உள்ள சவூதி அரேபியா.

மின்னனு-அரசு சேவைகளில் முதலிடத்தில் உள்ள சவூதி அரேபியா.

174
0

மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCWA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்க மின்னணு மற்றும் மொபைல் சேவைகள் முதிர்வு குறியீட்டில் சவூதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 93 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தச் சாதனையானது டிஜிட்டல் மாற்றத்தில் அரசு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுகளைப் பிரதிபலிக்கிறது என டிஜிட்டல் அரசு ஆணையத்தின் ஆளுநர், இன்ஜி. அகமது அல்சுவையன் கூறினார்.அரசாங்க மின்னணு மற்றும் மொபைல் சேவைகள் முதிர்வுக் குறியீடு (GEMS) தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான போர்ட்டல்கள், ஸ்மார்ட் அப்ளிகேஷன்கள் மூலம் வழங்கப்படும் 84 முன்னுரிமை அரசு சேவைகளின் அடிப்படையில் 17 நாடுகளை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்துகிறது.

சேவை கிடைக்கும் குறிகாட்டியில், சவூதி அரேபியா 2022 ஐ விட 1% அதிகரித்து, 98 சதவீதம் அடைந்துள்ளது; சேவை பயன்பாடு மற்றும் திருப்தி குறியீட்டில், சவூதி அரேபியா 84% ஐ எட்டியுள்ளது, இது 2022 ஐ விட +4.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான GOVTECH தரவுகளின்படி, 198 நாடுகளில் சவூதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள 193 நகரங்களில் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளின் அடிப்படையில் ரியாத் நகரம் உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!