மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) Qiwa தளத்திற்குள் மின்னணு சேவையாகப் பொது நிறுவனங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான உள்ளூர்மயமாக்கல் முன்முயற்சியின் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்துவதற்கான முதல் கட்ட முடிவைப் பயன்படுத்தத் தொடங்கியது.
டிசம்பர் 1, 2023 இல் தொடங்கிய இந்த முடிவை நடைமுறைப் படுத்துவதற்கான முதல் கட்டத்தில் மாபெரும் நிறுவனங்களும், இரண்டாம் கட்டத்தில் ஜூன் 1, 2024 முதல் பெரிய நிறுவனங்களும் அடங்கும் என்றும், மேலும் மூன்றாம் கட்டத்தைப் பொறுத்தவரை, இது டிச. 1, 2024 இல் தொடங்கும் மற்றும் மற்ற அனைத்து அளவிலான நிறுவனங்களையும் உள்ளடக்கியது என MHRSD தெரிவித்துள்ளது.
இதில் செயல்பாடு, பராமரிப்பு, நகரத்தைச் சுத்தம் செய்தல், சாலை செயல்பாடு, கேட்டரிங், தகவல் தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் பராமரிப்பு எனப் பல ஒப்பந்தங்கள் அடங்கும்.
இந்த முடிவை ஜூலை 2022 இல் MHRSD இன் மந்திரி பொறியாளர் அல்-ராஜி வெளியிட்டு, Qiwa தளத்தின் மூலம் அமைச்சகத்தால் வழங்கப்படும் மின்னணு சேவைகளுக்குள் இ-சேவையாக மாறுவதற்கு பொது நிறுவனங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான உள்ளூர்மயமாக்கல் முன்முயற்சியின் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்துவதற்கான சேவைக்கு ஒப்புதல் அளித்தார்.





