Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மதீனாவில் ஒரு புதிய கலாச்சார மையமான இஸ்லாமிய நாகரிக கிராமத் திட்டம் தொடக்கம்.

மதீனாவில் ஒரு புதிய கலாச்சார மையமான இஸ்லாமிய நாகரிக கிராமத் திட்டம் தொடக்கம்.

153
0

ருவா அல் மதீனா ஹோல்டிங், இஸ்லாமிய நாகரிக கிராமத் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தது, இது மதீனாவில் ஒரு புதிய கலாச்சார மற்றும் கல்வி மையமாகப் பார்வையாளர்களுக்கு இஸ்லாமிய பாரம்பரியத்தில் ஆழமாக விளக்கத்தை வழங்குகிறது.

இந்தத் திட்டம் பன்முக கலாச்சார மற்றும் கல்வி அனுபவத்தை வழங்குவதோடு பல்வேறு செயல்பாடுகள், சிறந்த விருந்தோம்பல் சேவைகள் மற்றும் இஸ்லாமிய உலக வரலாற்றின் பல்வேறு அம்சங்களை ஆராயும் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

257,000 சதுர மீட்டர் பரப்பளவில், இஸ்லாமிய நாகரிக கிராமம் அரேபிய தீபகற்பம், மஷ்ரிக், இஸ்லாமிய தெற்காசியா, மக்ரிப், சீன், சில்க் ரோடு, அல் அண்டலஸ் மற்றும் ஆப்பிரிக்கா என எட்டு தனித்துவமான புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பலவிதமான சில்லறை விற்பனை நிலையங்கள், பல்வேறு உணவு விருப்பங்கள், கலாச்சார ரீதியாகத் தனித்துவமான கஃபேக்கள் மற்றும் ஊடாடும் நிகழ்ச்சிகள், ஓய்வெடுக்கவும் சிந்தனை செய்யவும் பசுமையான இடங்கள் உட்பட பல்வேறு அனுபவங்களைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

இஸ்லாமிய நாகரிக கிராமம் ஒரு கலாச்சார ஈர்ப்பு மட்டுமல்லாமல் ஒரு சாத்தியமான பொருளாதார ஊக்கியாகத் தனியார் துறை ஈடுபாடு, நம்பிக்கைக்குரிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சவூதி நாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என Rua Al Madinah Holding இன் CEO இன்ஜி. அஹ்மத் அல்-ஜுஹானி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு கலாச்சார மையமாகத் திட்டத்தின் பங்கை வலியுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!