போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய மூன்று எத்தியோப்பியர்கள் 74.6 கிலோகிராம் ஹாஷிஸ் வகை போதைப் பொருட்களுடன் ரியாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலும் அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குப் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதற்கும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள்மீது விரைவான நடவடிக்கை எடுப்பதற்கும் உள்துறை அமைச்சகம் தனது உறுதிப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது.