சுவாச தொற்று நோய்கள் பரவாமல் தனிநபர்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, முன்னெச்சரிக்கையாக நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முகமூடிகளை அணியுமாறு சவூதி பொது சுகாதார ஆணையம் (வெகாயா) குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆணையத்தின் தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கான உதவி நிர்வாக இயக்குனர் டாக்டர் எமத் அல்-முஹம்மதி கூறுகையில், நெரிசலான பகுதிகளில், குறிப்பாகக் குளிர்காலத்தில் முகமூடிகளை அணிவதை ஊக்குவிப்பது, இந்த நேரத்தில் அதிகரிக்கும் சுவாச நோய்களைத் தடுக்கும். முகமூடிகளை அணிவதற்கான அறிவுரை கோவிட்-19 மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தொற்று நோய்களுக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கினார்.
நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் முகமூடி அணிவதன் முக்கியத்துவத்தை டாக்டர் அல்-முஹம்மதி எடுத்துரைத்தார்.





