சவூதி அரேபிய நீதிமன்றம் பெண்ணைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வெளிநாட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சவூதி ராயல் 150,000 அபராதம் விதித்தது.
பெண்ணைத் துன்புறுத்திய வெளிநாட்டவருக்கு எதிரான விசாரணைகளை முடித்த பின்னர், பொது வழக்குரைஞர் வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பியதோடு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்குச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தண்டனைகளை வழங்குமாறு பொது வழக்குரைஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.
துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மற்றொரு நபரின் உடல், மரியாதை அல்லது பாலியல் இயல்புக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு பேச்சு, செயல் அல்லது சைகை ஆகியவற்றின் அடிப்படையில் துன்புறுத்தல் குற்றம் நடந்தால் சட்டம் பயன்படுத்தப்படும் என்று கூறுகிறது.
இஸ்லாமிய ஷரியா மற்றும் சவூதி சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனிநபர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் துன்புறுத்தல் குற்றத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் அதன் நிகழ்வுகளைத் தடுப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதானவர்களின் பெயர்களைச் சவூதி பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் அறிவிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.





