கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சி மாநாட்டை முடித்த அரபுத் தலைவர்கள், மக்கள் செழிப்புடன் , பாதுகாப்புடன் மற்றும் நிலையான நாட்டை அடைய தங்கள் ஒற்றுமையை உறுதிப்ப்படுத்துவதன் அவசியத்தை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் அவர்கள் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். முதல் முறையாகச் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் அவரகள் இந்த மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், சூடான், ஏமன், லிபியா மற்றும் லெபனானில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
அரபு நாடுகளின் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை இந்தப் பிரகடனம் நிராகரித்துள்ளது.
பாலஸ்தீனியர்களின் உயிரைக் குறிவைக்கும் இஸ்ரேலியர்களின் விரோதப் பழக்கங்களையும் மீறல்களையும் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை அடைவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், அரபு அமைதி முன்முயற்சிக்கு இணங்க இரு நாடுகளும் அமைதியை அடைய ஒரு தீர்வைக் காணவும் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பின் அரபு லீக்கிற்கு சிரியா திரும்புவதை தலைவர்கள் வரவேற்றனர். சூடானில் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் மோதலை தூண்டும் வெளிநாட்டு தலையீடுகளை உச்சிமாநாடு நிராகரித்தது.
லெபனானுடனான ஒற்றுமையை உச்சிமாநாடு உறுதியளித்தது. அரசியலமைப்பு நிறுவனங்களின் பணிகளை மீட்டெடுத்து தேவையான சீர்திருத்தங்களை நடத்துவதற்கும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும், அனைத்து லெபனான் கட்சிகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சியில், சவூதி பல்வேறு கலாச்சார, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் கூட்டு அரபு நடவடிக்கைகளை வலுப்படுத்தும். இதில் தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்பிப்பது, அரபு நாடுகளுக்கான அடிப்படை உணவுப் பொருட்களின் விநியோகச் சங்கிலியைத் தக்கவைப்பதும் அடங்கும்.