Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பல்வேறு பயன்பாடுகளுடைய Premium residency அறிமுகப்படுத்தியது சவூதி அரேபியா.

பல்வேறு பயன்பாடுகளுடைய Premium residency அறிமுகப்படுத்தியது சவூதி அரேபியா.

196
0

உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது அதன் அடிப்படையில் சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டினர் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் சவுதி அரேபியாவில் தொடர்ந்து வசிப்பதற்கு ஏதுவான ஒரு சூழலைச் சவுதி அரசாங்கம் ஓரிரு வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது அதனைத் தொடர்ந்து அதனின் விரிவாக்கமாகச் சவுதியில் பிரீமியம் ரெசிடென்சி என்கின்ற சிறப்பு வகையான குடியிருப்பு உரிமைகளை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தி உள்ளது அதன்படி வெளிநாட்டினர் சில வழிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர்களால் இதில் ஏதேனும் ஒரு வகையான சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

Special Talented Residency
Investor Residency
Gifted Residency
Entrepreneur residency
Real Estate Residency
Limited duration Residency
Unlimited Division Residency

ஆகவே இந்தச் சிறப்பு அந்தஸ்துடைய பிரீமியம் ரெசிடென்சிகளை கொண்டிருப்பவர்கள் மற்ற பிற சாதாரண குடியிருப்பு உரிமைகளை வைத்து இருப்பவர்களைவிட கூடுதலான பயன்பாடுகளைப் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ஏழு வகையான சிறப்பு அந்தஸ்ததுகளை பெற்ற வெளிநாட்டினர் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு அதே சிறப்பு அந்தஸ்துகளை உடைய பிரிமியம் ரெசிடென்சியை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சிறப்பு அந்தஸ்துடைய குடியிருப்பாளர்கள் சவுதி அரேபியாவில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சிறப்பு அந்தஸ்துடைய குடியிருப்பாளர்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதற்கு சாதாரண residency permitக்கு கட்டக்கூடிய levy என்கிற சிறப்பு கட்டணங்களைச் செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்தச் சிறப்பு அந்தஸ்து கொண்டவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கும் மீண்டும் சவுதி அரேபியாவில் வருவதற்கும் எக்ஸிட்ரி என்றே போன்ற எந்த வீசாவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் சவுதி அரேபியாவில் சொத்துக்கள் வாங்குவதற்கு விற்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது அதனுடன் இவர்கள் தங்களது உறவினர்களைச் சவுதி அரேபியாவிற்கு அழைத்து வருவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைக்காக ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்திற்கு மாறுவதற்கு எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Gifted ரெசிடென்சியின் சிறப்பு அந்தஸ்து பெற தகுதிஅடைய சவுதி அரேபியாவின் கலாச்சார அமைச்சகம் அல்லது விளையாட்டு அமைச்சகம் வரையறுத்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அல்லது ஏதாவது குறிப்பிடத் தக்க வகையில் சிறப்பான விருதுகளை இந்த அமைச்சகத்திடமிருந்து பெரும் பட்சத்தில் இந்தச் சிறப்பு அந்தஸ்து பிரீமியம் ரெசிடென்சியை இலவசமாக அதாவது கிப்டட் ரெசிடென்சியாக அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்வெஸ்ட்டர் ரெசிடென்சி பெறுவதற்கு குறைந்த பட்சம் 7 மில்லியன் சவுதி ரியால்களை சவுதி அரேபியாவில் முதலீடு செய்வதன் மூலம் இந்தச் சிறப்பு அந்தஸ்து இன்வெஸ்டர் ரெசிடென்சி பெர்மீட்டை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enterperuner ரெசிடென்சியின் கீழ் குறைந்தபட்ச தகுதி அடைய புதிய தொழில் முனைவோர்கள் குறைந்தபட்சம் நான்கு லட்சம் ரியால் அளவிற்கு சவுதி அரேபியாவில் 20% சதவீதம் முதலீடாகக் கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15 மில்லியன் சவுதி ரியால் நேரடி முதலீடாகச் சவுதி அரேபியாவில் முதலீடு செய்து புதிய தொழில் முனைவராகத் தனது தொழிலைத் தொடங்க கூடியவர்களுக்கு இந்த இன்வெஸ்ட்டர் ரெசிடென்சியின் மூலம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ரெசிடென்சி பெற தகுதிஉடைய குறைந்தபட்சம் 4 மில்லியன் சவுதி ரியால் மதிப்புடைய குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்பு சொத்துக்களை வாங்க வேண்டும் மேலும் இந்தச் சொத்து எந்தக் காலத்திலும் அடமானத்திற்கு அடமானம் வைக்கப்படக் கூடாது இந்த சொத்தில் இருந்து எந்தவித வங்கி கடனும் பெறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் பர்மிட் ரெசிடென்சிப்பர்மீட் இன்வெஸ்டர் ரெசிடென்சி பெர்மிட் எண்டர்ப் பண்ண ரெசிடென்சி பெர்மிட் மற்றும் ஸ்பெஷல் டேலண்டர் ரெசிடென்சி பெர்மிட் பெறுவதற்கு அதன் கட்டணமாக 4000 சவுதி ரியால் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் லிமிடெட் எனக் காலவர நிர்ணயிக்கப்பட்ட ரெசிடென்சி பெர்மிட் பெறுவதற்கு வேறு எந்தத் தகுதியும் குறிப்பிடப்படவில்லை ஆனால் அதன் கட்டணமாக வருடாவருடம் ஒரு லட்சம் ரியால்கள் செலுத்தப்பட வேண்டும் இந்த ரெசிடென்சி பர்மிட் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும் அன்லிமிடெட் எனக்கூடிய வரையறுக்கப்படாத ரெசிடென்சி பெர்மிட் பெறுவதற்கு குறைந்தபட்ச எந்தத் தகுதியும் குறிப்பிடப்படவில்லை ஆனால் அதன் கட்டணமாக 8 லட்சம் ரியால்கள் வரை செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!