சவூதி அரேபியாவின் பணவீக்க விகிதம் 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 2.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஒரு மாதத்திற்குள் பணவீக்க விகிதம் முந்தைய மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் 2023 இல் 0.2 சதவிகிதமாக இருந்தது எனஉம், சவூதி அரேபியாவில் பணவீக்கம் 3 மாதங்களாகச் சரிவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்து வருகிறது எனவும் சமீபத்திய புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தின் (GASTAT) அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூன் 2023 இல் சவூதியில் வீட்டு வாடகைகள் 10.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை விலைகள் 22.8 சதவீதம் அதிகரித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் பானங்கள் பிரிவின் குறியீட்டில் ஒரு சதவீதமும், வீட்டுவசதி, நீர் மற்றும் மின்சாரம் பிரிவில் 9.1 சதவீதமும், போக்குவரத்து பிரிவில் 1.6 சதவீதமும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
ஆணையத்தின் தரவுகள் கடந்த மாதம் மொத்த விலைக் குறியீட்டில் ஆண்டு அடிப்படையில் 1.3 சதவிகிதம் சரிவைக் காட்டியது, மேலும் மாதாந்திர அடிப்படையில் 0.2 சதவிகிதம் சரிந்துள்ளது ஜூன் 2023க்கான பணவீக்க விகிதம், ரியாத், தம்மம், ஹைல் மற்றும் நஜ்ரானில் மாதாந்திர அடிப்படையில் அதிகரித்தது.
மறுபுறம், மக்கா, ஜித்தா, மதீனா, ஹோஃபுஃப், அபா மற்றும் புரைதா ஆகிய இடங்களில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது, அதே சமயம் தைஃப், தபூக், அல்-பஹா, சகாக்கா, அரார் மற்றும் ஜசான் ஆகிய இடங்களில் பணவீக்க விகிதம் எதிர்மறையான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.