நீர் திட்டமிடலுக்கான புவியியல் தகவல் அமைப்பை (GIS) நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நீர் மேலாண்மை மற்றும் திட்டமிடலில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் அறிவித்து, சவூதியில் உள்ள நீர் துறைக்கான சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒரு ஸ்மார்ட் வாட்டர் டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் தகவல் மற்றும் இடர் மேலாண்மைக்கான ஸ்மார்ட் டிஜிட்டல் அமைப்புகளை உருவாக்குவது, அதன் மூலம் முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்துவது மற்றும் அத்தியாவசிய நீர் பகுப்பாய்வுகளை மேற்கொள்வதே திட்டத்தின் குறிக்கோள் என்று அமைச்சகத்தின் துணைச் செயலர் டாக்டர் அப்துல் அசிஸ் அல்-ஷைபானி விவரித்தார்.
முதலாவதாக நீர் தரவு மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் தற்போதைய நிலையை மதிப்பிடுதல், அடுத்து சர்வதேசச் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிதல், மூன்றாவதாகத் தரவு மற்றும் டிஜிட்டல் அமைப்புகள் தொடர்பான நீர்த் துறையின் தேவைகள் மற்றும் தேவைகளின் இடைவெளி பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுதல், நான்காவது நிலை தேவையான தரவுத்தளங்களை நிறுவுவதற்கும் டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் பிரிக்கபட்டுள்ளது.
2025 இல் திட்டமிடப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டங்கள், ஒருங்கிணைந்த நிறுவன நீர் தரவுத்தளத்தை வடிவமைத்து உருவாக்குதல் மற்றும் சோதனை நடவடிக்கைக்காக ஸ்மார்ட் டிஜிட்டல் நீர் அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அல்-ஷைபானி கூறினார்.
2026 இல் திட்டமிடப்பட்ட திட்டத்தின் இறுதிக் கட்டமானது, தரவுத்தளங்கள் மற்றும் ஸ்மார்ட் டிஜிட்டல் அமைப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தும்.
டிஜிட்டல் இயங்குதளமானது பணி மேலாண்மை, செயல்முறை திட்டமிடல், தரவுச் செயலாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை இணைத்து, அதிநவீன மற்றும் நிலையான முறையில் பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட ஒரு விரிவான கருவியாக மாற்றும்.





