சவூதி மத்திய வங்கியின் (SAMA) ஆளுநர் அய்மன் அல்-சயாரி, நிதி தொழில்நுட்ப (FinTech) நிறுவனங்களின் எண்ணிக்கையை 525 ஆக அதிகரிக்க SAMA இலக்கு வைத்துள்ளது என்று கூறினார்.
FinTech 18,000 சிறப்பு வேலைகளை உருவாக்குவதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2030 க்குள் சவூதி ரியால் 13 பில்லியனுக்கும் அதிகமாக உயர்த்த பங்களிக்கும் என்றும், கடந்த மாத இறுதியில் FinTech நிறுவனங்களின் எண்ணிக்கை 200 நிறுவனங்களைத் தாண்டி, சவூதியின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் 8.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது உலகின் சராசரியாக 3.5 சதவீதத்தை விட அதிகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவில் சவூதி அரேபியாவின் நிதித் துறையில் மூலதனப் போதுமான அளவு விகிதம் (CAR) 20.1 சதவீதம், பணப்புழக்க கவரேஜ் விகிதம் (LCR) 188.3 சதவீதம், நிகர நிலையான நிதி விகிதம் (NSFR) 115 சதவீதம் எட்டியுள்ளதாக SAMA ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் துறையினர் தொடர்ந்து ஆதரவளித்து வருவதை சுட்டிக்காட்டி மேலும் இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் எண்ணெய் அல்லாத நடவடிக்கைகள் முறையே 5.4 மற்றும் 5.5 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சவூதி அரேபிய வங்கிகள் வங்கிக் கடனுக்கான தொடர்ச்சியான தேவையைப் பூர்த்தி செய்து, கடன் வழங்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருடாந்திர அடிப்படையில் இரண்டாவது காலாண்டில் கடன் விகிதம் 10.2% அதிகரித்துள்ளதாக அல்-சயாரி கூறினார்.





