ஆறு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நடப்பு சீசனில் உம்ரா செய்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் சதவீதம் 2023 ஆம் ஆண்டில் 581% அதிகரித்துள்ளது.
இது நாட்டின் குறிப்பிடத் தக்க வளர்ச்சி என சவூதி அரேபிய சுற்றுலாத் துறை முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் தெரிவித்துள்ளார்.
சவூதி சுற்றுலா ஆணையத்தின் CEO Fahd Hamidaddin மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புனித ரமழான் மாதத்தில் சவூதியின் உள்ளே மற்றும் வெளியிலிருந்து உம்ரா செய்தவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியுள்ளது.நாடு முழுவதும் அற்புதமான சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்த 600 மில்லியனுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு சுற்றுலா செலவினங்களின் வளர்ச்சி விகிதம் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில்
45% எட்டியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் காலாண்டு எண்ணிக்கை 7.8 மில்லியனாகும், 2019 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 64% வளர்ச்சி அடைந்துள்ளது.
கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வளர்ச்சி 49% விகிதமும், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் விகிதம் 107% எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளான துருக்கி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி மற்றும் ஜெர்மனி, இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 50% எட்டியுள்ளது.
வெளியிலிருந்து வந்த பார்வையாளர்களில் 4.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் மக்கா முதலிடமும் , ரியாத் இரண்டாம் இடத்தைப் பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜித்தாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சி 247 சதவீதத்தை எட்டியுள்ளது.