மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய கவுன்சிலுடன் இணைந்து, அனைத்து நிறுவனங்களிலும் நேரடி சூரிய வெப்பத்தின் கீழ் பணிபுரிவதைத் கடந்த ஜூன் 15 ம் தேதி முதல் செப்டம்பர் 15 ம் தேதி வெள்ளிக்கிழமை வரை அமல்படுத்தி இருந்தது. ஆகவே வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறையத் தொடங்கியதை தொடர்ந்து செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலிலிருந்த மதிய இடைவேளை தடை முடிவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெயிலில் வேலை செய்வதைத் தடைசெய்யும் முடிவை அமல்படுத்திய நிறுவனங்களின் இணக்க விகிதம் 95% ஐ எட்டியது, மேலும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இந்த முடிவைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பல கள மேற்பார்வை சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு சவூதியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிறுவனங்கள் இந்த முடிவைச் செயல்படுத்த உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவற்றிக்கு ஒத்துழைப்பை நல்கிய அணைத்து நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர், அகமது பின் சல்மான் அல்-ராஜி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.