புனித தளங்களில் தொலைந்து போன மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹஜ் பயணிகளின் அடையாளங்களை, மொபைல் மின்னணு சேவைகள்மூலம், மக்காவில் உள்ள பொது கடவுச்சீட்டு இயக்குனரகம் (ஜவாசாத்) சரிபார்த்துள்ளது.
வழிகாட்டுதல் மையங்களின் சிறப்புக் குழுக்கள்மூலம் பாஸ்போர்ட் இயக்குநரகம் இந்தச் சேவையைப் பயணிகளுக்கு வழங்குகிறது.அடையாளச் சரிபார்ப்பு பயோமெட்ரிக் சரிபார்ப்பு சாதனங்களை (கைரேகைகள்) பயன்படுத்தி, ஜவாசாத் குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது.