உலகெங்கிலும் இருந்து இஸ்லாமியர்கள் உம்ராஹ் செய்ய மக்காஹ் வருவதற்கு வினானம் மூலம் ஜெத்தா வருகின்றனர்.
உறவினர்களோ அல்லது நணர்களோ இல்லாத பட்சத்தில் அல்லது குரூப்பாக வராமல் தனியாக அல்லது குடும்பத்தினருடன் வருபவர்களுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். காரணம் பயணிகள் அனைவருக்கும் இங்குள்ள அரபி மொழி தெரிவதில்லை. ஹெல்ப் டெஸ்க் என்ற சேவை மையம் ஏர்போர்ட்டில் இருந்தாலும் அதனை முறையாக நாடி உதவி பெறுவதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனர்.
இப்படி மக்கா செல்ல ஜெத்தாஹ் வந்து இறங்கும் மக்கள் அல்லது பயணிகள் இனி யாரையும் அனுக தேவை இல்லை அல்லது யாருடைய உதவியும் இல்லாமல் பேரூந்திலோ அல்லது ட்ரைனிலோ நேராக மக்காஹ் செல்ல இந்த செய்தி வழிகாட்டும்.
சவூதி அரசு உம்ராஹ் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க மக்கா பஸ் அப்ளிகேசன் எனும் தளத்தை ராயல் கமிசன் மக்கா பஸ் சர்வீஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஜெத்தா விமான நிலையத்திலிருந்து நேரிடையாக மக்காஹ் செல்ல முன்பதிவு செய்து எளிய முறையில் யாருடைய உதவியுமின்றி பயணிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
பேரூந்து செல்லும் வழித்தடங்களின் விபரங்கள் மற்றும் ஜெத்தாஹ்வில் புறப்படும் நேரம் மற்றும் மக்காஹ் சென்று சேரும் நேரம் என அனைத்து அவசியமான விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். கட்டணமும் அதிகமில்லை.
அதுபோல் Harmain High-speed Rail சேவைகள் அடங்கிய HHR எனும் அப்ளிகேஷனும் உள்ளது. இதில் சென்று முன்பதிவு செய்தும், அதிக லக்கேஜ் இருந்தால் அதற்கெனக் கட்டணமும் செலுத்தி ஜெத்தா ஏர்போர்ட்டிலிருந்து நேரிடையாக மக்காஹ் பயணிக்கவும் சேவை உண்டு.
ஆக மக்கா பஸ் சர்வீஸ் மற்றும் HHR அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யுங்க, யாருடைய உதவியுமின்றி ஈசியா மக்காஹ் சென்று சேரலாம். இவற்றை எப்படு முன்பதிவு செய்வது என்பதை பின்வரும் காணொளி காட்சிகள் வழியாக அறிய சவூதி தமிழ் மீடியா தன் நேயர்களுக்கு வழிகாட்டுகின்றது.
என்ன மக்களே… ஜெத்தா ஏர்போர்ட்டிலிருந்து யாருடைய உதவியுமின்றி இனி ஈசியா மக்காஹ் சென்றடையலாமா? இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிர்ந்து உதவுங்களேன்.