ஜெத்தா மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது 75 வது இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மாலை 5 மணி அளவில் ஷரஃபியாவில் உள்ள லக்கிதர்பார் ஆடிட்டோரியத்தில் தமிழ் மாணவ மாணவியர்களுக்குப் பேச்சுப் போட்டி நடைபெறுகின்றது.
அனைத்துப் பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொண்டு கனவுகள் மெய்ப்பட எனும் தலைப்பில் பேசலாம். 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணாக்கர்களுக்கு இரண்டரை நிமிடம் முதல் 3 நிமிடங்களும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மூன்று நிமிடங்கள் முதல் மூன்றரை நிமிடங்கள் வரை நேரம் கொடுக்கப்படும் என்றும், நேரிடையாக வந்து பெயர் கொடுத்தும் கலந்து கொள்ளலாம் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனைப் பற்றிய விபரங்களுக்குத் திரையில் தெரியும் அலைப்பேசி எண்களில் அழைத்தும் பதிவுகள் செய்து வந்து பேசலாம்.
மேலும் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அனைத்து மொழி பேசும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகளும் நடைபெற உள்ளது.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், நுழைவுக் கட்டணம் இல்லை என்றும் சிறந்த படைப்புகளுக்கும், பேச்சுப் போட்டியில் வெல்லும் மாணாக்கர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.





