Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜெத்தா மாநகரில் காமெடி தர்பார் எனும் தீபாவளிப் பண்டிகை தமிழ்த் திருவிழா நிகழ்ச்சி மிகச்சிறப்புடன் நடைபெற்றது.

ஜெத்தா மாநகரில் காமெடி தர்பார் எனும் தீபாவளிப் பண்டிகை தமிழ்த் திருவிழா நிகழ்ச்சி மிகச்சிறப்புடன் நடைபெற்றது.

387
0

மெர்ரிலேண்ட் ஈவண்ட் ஆர்கனைசர் உதவியுடன் சவூதி தமிழ் கலாச்சார மையம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஜெத்தா தமிழ்த் திருவிழாவினை காமெடி தர்பார் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை முழு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடத்தியது.

நவம்பர் 10 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் இரவு 11:30 வரை ஐந்து மணி நேரம் மகிழ்ச்சி மழை கொட்டும் அளவிற்கு தஹ்லியா ஸ்குயர் எதிரில் உள்ள லயலி திருமண அரங்கில் நடைபெற்றது.

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கி கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் நாயகன் மதுரை முத்து, கலக்கப் போவது யாரு சீனன் 5 இன் சாம்பியனும் வெள்ளித்திரையில் மின்னி வருகின்ற முகமது குரேஷி மற்றும் தென்னகத்து நயன் தாரா என அழைக்கப்படும் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அறந்தாங்கி நிஷா ஆகியோர் இடைவிடாமல் தங்கள் நகைச்சுவையினால் மக்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக ஜூபைல் யூனிவர்ஷல் இன்ஸெக்‌ஷன் நிறுவனத்தில் சி.இ.ஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் கலந்து கொண்டு சிறுவர்களையும், இளைஞர்களையும் செம்மைப் படுத்தும் வகையில் பேசி, கேள்விகள் கேட்டுப் பரிசும் வழங்கினார். கல்வியின் அவசியத்தை, அரசு அதிகாரிகளாகச் செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து நிகழ்ச்சிதின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியதோடு சிறப்பு விருந்தினர்களுக்கும் பரிசுகளை மழையாகப் பொழிந்தார். மேலும் நிர்வாகிகளுக்கு அப்வஜ்ஜான் அரபி உணவுகளை விருந்தோம்பலாகக் கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்தார்.

திருச்சியில் இருந்து எத்திகல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முனைவர் பாலா மற்றும் அசோக் தங்கள் நிறுவன செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

சென்னை தர்பார் உணவகத்தின் உரிமையாளர் மர்ஜூக் அவர்கள் கலந்து கொண்டு பெருமை படுத்தினார். அதுபோல் ஆதாப் உணவக ஜாஃபர் கலந்து கொண்டு வீட்டு உபயோகப் பொருட்களைப் பரிசுகளாகக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மூவருக்கு வழங்கினார்.

ஜெத்தாஹ்வின் மூத்த பாடகர் மிர்ஷா. ஷெரீஃப் முதல் பாடலைப் பாடி துவக்க அவரைத் தொடர்ந்து இந்தியப் பன்னாட்டுப் பள்ளி ஆசிரியர் குரு, ஜெம்ஸ் ஜாஹிர், ரொக்ஸானா, ஷோஃபியா, கோட்டி, ராஜசேகர், ஆதம் அபுல் ஹஸன் ஆகியோர் திரைப்பாடல்களை கரோக்கி மூலம் பாடி பார்வையாளர்களை ஈர்த்தனர்.

ரோஜாக் கூட்டத்தின் மொட்டுகள் அசத்தலான நடனம் ஆட மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

வரவேற்புரையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவரும், சவூதி தமிழ் மீடியா மற்றும் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான லயன் ஜாஹிர் ஹூஷேன் நிகழ்த்தி வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு நிகழசியினையும் தொகுத்தளித்தார்.

நிகழ்ச்சியில் செந்தமிழ் நலமன்றத்தின் ஷெரீஃப், முகையதீன், ஹபீப் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும் ஜெத்தா தமிழ் மன்ற நிர்வாகிகள் இப்ராஹிம் மரைக்காயர், அப்துப் பத்தாஹ், ஆதம் அபுல் ஹஸன், தமிழ்ச் சங்கத்தின் ராமகிருஷ்ணன், மூர்த்தி உள்ளிட்டோரும், மூத்த குடிமகன்கள் பொறியாளர் குத்புதீன், பியாரேஜான், லூனா அன்வர், ரிஃபாய் முகம்மது அலி, கியா நாஸர், ராயல் டிராவல்ஸ் ஜலாலுதீன், இருஃபா இத்ரீஸ், புக்‌ஷான் மருத்துவமனை செவிலியர்கள், ஜெத்தா தமிழ் புல்ஸ் காளைகள் ராபிக், ரியாஸ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை ஜெம்ஸ் மற்றும் சவூதி தமிழ்க் கலாச்சார மையத்தின் நிர்வாகிகளான ஜாஹிர் ஹூஷைன், அல் அமீன், முகமது உமர், ரஃபிக் ஹூஷைன், இஸ்மாயில் ஷ்ரீஃப், நசுருல்லாஹ், ஜமீல் ஆகியோர் ஒருங்கிணைக்க அவர்களுக்கு உதவிகரமாகத் தன்னார்வலர்கள் பழநி குமார், ஃபரூக், ஜூல்ஃபிகார், சாதிக், இர்ஃபான், அப்துல் அஜீஸ், புக்ஸான் இலக்கியா மற்றும் மதுவர்சினி, UIC நிறுவன யாஸிர், ஆதாப் ஜாஃபர் செயல்பட்டனர்.

யான்பு தமிழ்ச் சங்கத்தில் இருந்தும், ஜெத்தா மற்றும் ராபிக் பகுதிகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

இந்நிகச்சிக்கு ரியாத் நகரத்தில் இருந்து ரியாத் தமிழ்ச் சங்க முன்னோடி கஜ்ஜாலி அவர்களும் கலந்து கொண்டார். சுமார் 320 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாங்கள் புத்துணர்வு அடைந்துள்ளதாக ஜெத்தா வாழ் தமிழ் மக்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!