ஜித்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் அஜீசியா வில்லேஜ் ரெஸ்டாரண்டில் ஜெத்தா தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்சிக்கு அப்துல் ஃபத்தாஹ் தலைமை வகித்தார்.
நடப்பாண்டு தலைவராகச் சீனி அலி, செயலாளராக இப்ராஹிம் மரைக்காயர் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு DTM ஷாஜி குரியன் பொறுப்புகளை எடுத்துரைத்து பொறுபேற்கச் செய்து வைத்தார்.
இந்நிகழ்சிக்கு ஜூபைல் யூனிவர்ஸல் இன்ஸ்பெக்ஷன் நிறுவனத்தின் CEO மற்றும் மேனேஜிங் டைரக்டர் பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டும், சொல்வேந்தர் மன்றத்தின் பணிகள் குறித்தும் உரையாடி வந்திருந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார். மேலும் வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவுப் பரிசினை வழங்கியது குறிப்பிடத் தக்கது. அதிகாலை தொழுகையின் அவசியத்தையும், அதன் பயனையும் கூறியதுடன் கின்னஸ் சாதனைகள் செய்ய நம் மக்கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சொல்வேந்தர் மன்றத்தின் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு அவரது படத்தை ஓவியமாகத் தீட்டிப் பரிசளித்தனர். இந்த ஓவியத்தை வரைபடக் கலை பயிற்சி பெறுகின்ற துர்கிஷ் நாட்டைச் சேர்ந்தவரும், ஆரியாஸ் மற்றும் ETA நிறுவன நிதி மேலாளர் மொய்தீன் சீனி அலி அவர்களின் மருமகளுமான சாலிஹா ஃபவாஜ் அவர்கள் வரைந்து வழங்கியது குறிப்பிடத் தக்கது.