இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 வெள்ளிக்கிழமை மாலை ஜெத்தா ஷரஃபியாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கன பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்திய பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் அதிக அளவில் கலந்து கொண்ட பேச்சுப் போட்டியில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவிகள் பங்கேற்று அழகுத் தமிழில் உரை நிகழ்த்தினர்.
இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தமிழ் ஆசிரியைகள் பானு, ஆயிஷா பானு, பென்ஸி ஆகியோர் வழிகாட்டலில் ஆசிரியர் குரு அவர்கள் ஒருங்கிணைத்த போட்டியில் டாக்டர் ஜெயஸ்ரீ மூர்த்தி அவர்களும், டெல்லி பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர் கணேஷ் அவர்களும் மதிப்பீட்டார்களாகச் செயல்பட்ட போட்டியினை அஜீதா சலீம் மற்றும் பூஜா நரேஷ் ஆகியோர் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் இப்படி ஒரு போட்டியினை வைத்து வாய்ப்பளித்த நிர்வாகிகளைப் பெற்றோர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் Winter Tamil Fest எனும் காமடி கலாட்டா நிகழ்ச்சியில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.