ஜெத்தா ஷரஃபியாவில் பெண்களுக்கான கேக் மற்றும் புட்டிங் செய்யும் போட்டி Dessert of the Desert எனும் தலைப்பில் நடந்தது. இது தனித்திறனை வெளிக்கொண்டு வருகின்ற போட்டியாக நடத்தப்படுவதாகக் காமெடி கலாட்டா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
சுமார் 23 பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். விதவிதமான வண்ணமயமான கேக்குகள் மற்றும் புட்டிங்குகளை அரங்கிற்கு எடுத்து வந்து நடுவர்களை மகிழ்ச்சிப் படுத்தினர்.
கேரள மலபார் அடுக்களை சங்கத்தின் பிதிநிதிகளான குப்ரா லத்தீஃப் மற்றும் சஜினா யூனுஸ் ஆகியோர் கேக்குகள் மற்றும் புட்டிங்குகளை பார்த்து, ருசித்து மதிப்பீடு செய்தனர்.
வெற்றியாளர்களைப் பிப்ரவரி 17 அன்று தஹ்லியா ஸ்கொயர் எதிரில் உள்ள லயலி வெட்டிங் ஹாலில் நடக்கும் காமெடி தர்பார் நிகழ்ச்சியில் அறிவித்துப் பரிசுகள் வழங்குவதாகக் கூறினர்.
சாக்லேட் கேக், ரசமலாய் கேக், ஃப்ரூட் புட்டிங், ஸ்ட்ராபெர்ரி கேக் எனப் பல வகைகளை ஐந்து நட்சத்திர உணவகத்தில் கூட உண்ண முடியாத ருசிகளில் உண்டு களித்தோம் எனக் கலந்து கொண்ட பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியைத் திருமதி அஜிதா சலீம் மற்றும் பூஜா நரேஷ் ஒருங்கிணைக்கத் தஞ்சை லயன் ஜாஹிர் நிர்வகித்து நடத்திக் கொடுத்தார். மேலும் அனைவருக்குமான சான்றிதழ்கள் மெடல்களை முக்கிய நிகழ்வான காமெடி தர்பார் நிகழ்ச்சியில் நகைச்சுவை நட்சத்திரங்கள் அசார், டி.எஸ்.கே மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் வழங்க இருப்பதாகவும் கூறினார். வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும், சனிக்கிழமை பாட்டுப் போட்டியும் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.





