தெற்கு ஜெட்டாவின் பிரபலமான அல்-சவாரிக் சந்தையில் ஏற்பட்ட பெரிய தீயை அணைப்பதில் குடிமைத் தற்காப்புப் படைகள் வெற்றி பெற்றன.மேலும் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகச் சந்தையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்,மே 12 அன்று ஏற்பட்ட முதல் தீ விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தீ பற்றிய தகவலை அதன் பாதுகாப்பு செயல்பாட்டு அறை (911) பெற்றவுடன், குடிமைத் தற்காப்பில் இருந்து பல தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சந்தைக்கு விரைந்து,அக்கம் பக்கத்து கடைகள் மற்றும் சந்தைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் குழுவினர், சில மணி நேரங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை, சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கி, மேலும் சிறப்புக் குழு, தீ விபத்து ஏற்பட்ட இடத்தைக் கண்டறிந்து, மின்சார நிறுவல்களை ஆய்வு செய்வதோடு, பெட்ரோலியம் மற்றும் எரியக்கூடிய பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதைச் சரிபார்த்தது.
கடந்த மே 12 வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட முதல் தீ விபத்தில் அல்-சவாரிக் மார்க்கெட்டில் உள்ள புதிய ரஹ்மானியா சூக்கின் அனைத்து கடைகளும் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது,ஹர்ராஜ் என்று பிரபலமாக அறியப்படும் இந்தச் சந்தை மற்ற சந்தைகளை ஒப்பிடும்போது மிகவும் குறைந்த விலையில் பல்வேறு பொருட்களுக்குப் பிரபலமானது.
ஆடைகள், மின் மற்றும் சுகாதார உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்கும் 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான விற்பனையாளர்கள் நடைபாதைகள் மற்றும் வெளிப்புறங்களில் பொருட்களை விற்கிறார்கள்.