2023 செப்டம்பரில் சவூதி அரேபியாவில் வெளிநாட்டினரின் தனிப்பட்ட பண பரிவர்த்தணை 12.57% குறைந்து 9.91 பில்லியன் ரியால்களாக உள்ளது.இது 2022 செப்டம்பரில் 11.33 பில்லியன் ரியாலாக இருந்தது. செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பணம் முந்தைய மாதத்தை விட 8% சரிந்து 10.77 பில்லியன் ரியால்களாக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், வெளிநாட்டினரின் மொத்தப் பணம் 10% குறைந்து 31.3 பில்லியன் ரியால்களாக உள்ளது.2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வெளிநாட்டினரின் மொத்தப் பணம் சுமார் 93.22 பில்லியன் ரியால்களாகும், இது 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 111.42 பில்லியன் ரியால்களாக இருந்தது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட பணம் 3.8% குறைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள், இப்பகுதிக்கு அனுப்பப்படும் பணம் 1.7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பிராந்தியத்திற்கு 200 டாலர்கள் பணம் அனுப்புவதற்கான சராசரி செலவு 6.2 சதவீதமாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 6.4 சதவீதமாக இருந்தது என்று வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.





