சவூதி அரேபியாவில் 5,000 மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கத்துடன்;30,000 மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் இலக்கின் ஒரு பகுதியாக “எதிர்கால நுண்ணறிவு புரோகிராமர்களின்” ஐந்தாவது தொகுதிக்கான பதிவைச் சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) துவங்கியுள்ளது.
இந்தத் திட்டம் பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவின் (AI) அடிப்படைகளைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும் முயல்கிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் கணினி பார்வை உள்ளிட்ட பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய பாடநெறி அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும்.
10 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் இரண்டரை மணிநேரம் நீடிக்கும் அமர்வு,25 மணிநேர பயிற்சியைக் கொண்டுள்ளது. மாணவர்கள் திட்டத்தில் பதிவு செய்து, அதிகாரம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகிய இரண்டின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களைப் பிப்ரவரி 29ஆம் தேதி வரை பெறலாம் என சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் அறிவித்துள்ளது.