ரியாத் நகரத்திற் கான பிராந்திய உணவாக அல்-மர்கௌக் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மக்கா நகரத்திற்கான பிராந்திய உணவாகச் சலீக் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சமையல் கலை ஆணையம் வெளிப்படுத்தியது.
தேசிய மற்றும் பிராந்திய உணவுகள் விவரிப்பு முயற்சியின் ஒரு பகுதியாகச் சவூதி அரேபியாவின் அனைத்து 13 மாகாணங்களுக்கும் பிராந்திய உணவுகளின் பெயரை ஆணையம் அறிவித்தது.
மதீனி அரிசி மதீனா பகுதிக்கான உணவாகும், அல்-முலைஹியா வடக்கு எல்லைப் பகுதிக்கான உணவாகவும், அல்-ஜூஃப் பகுதிக்கான பிராந்திய உணவாக அல்-புகைலாவும், அல்-பஹா பிராந்தியத்திற்கான முகானா ரொட்டியும், ஹைல் பகுதிக்கான கியூபைபத் ஹைலும், கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பிரபலமான உணவான நஜ்ரான் பகுதிக்கான அல்-ருக்ஷும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அல்-கிளேஜா அல்-காசிம் பகுதிக்கும், கிழக்கு மாகாணத்திற்கு ஹஸ்ஸாவி அரிசியும், அல்-மக்ஷ் ஜசான் பகுதிக்கும், அல்-சயாதியா தபூக் பகுதிக்கும், அல்-ஹனீத் ஆசிர் பகுதிக்கும் தேர்வு செய்யப்பட்டது.
ஜனவரி 2023 இல் ஜரீஷை சவூதியின் தேசிய உணவாகவும், மக்ஷுஷை தேசிய இனிப்பாகவும் பெயரிடுவதன் மூலம் ஆணையம் இந்த முயற்சியைத் தொடங்கியது.இந்த முயற்சியானது சவூதி சமையல் கலைகளின் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதையும், அதன் குறியீட்டு மதிப்பில் முதலீடு செய்வதையும், அதன் பல்வேறு சமையல் குறிப்புகளை ஆவணப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





