சவூதி அரேபியா தன் 93வது தேசிய தினத்தைச் செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை பொது விடுமுறையுடன் கொண்டாடுகின்றது.
நாடு முழுதும் இப்போதிலிருந்தே கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில் பல தொழில் நிறுவனங்களும், வியாபார நிறுவனங்களும் தேசிய நாள் சலுகைகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகின்றது.
We dream and We Achieve எனும் ஸ்லோகனுடன் செப்டம்பர் 23 அன்று சவூதி அரேபியாவின் 93 வது தேசிய நாள் கடைபிடிக்கப் பட்டாலும் பொதுவிடுமுறையை செப்டம்பர் 24 அன்று அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.