Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியா சுற்றுலா தலங்களுக்கான சந்தைப்படுத்தல் அலுவலகங்களை நிறுவ உள்ளது.

சவூதி அரேபியா சுற்றுலா தலங்களுக்கான சந்தைப்படுத்தல் அலுவலகங்களை நிறுவ உள்ளது.

168
0

சவூதி அரேபியா தேசிய மற்றும் உலக அளவில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றும் இலக்கை அடைய அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அதன் சுற்றுலாத் தலங்களுக்குச் சந்தைப்படுத்தல் அலுவலகங்களை நிறுவ உள்ளது.கடந்த வாரம் மந்திரி சபையால் அங்கீகரிக்கப்பட்ட சவுதி சுற்றுலா ஆணையத்தை ஒழுங்குபடுத்தும் விதிகளில் இதுவும் ஒன்றாகும்.

சுற்றுலாத்துறை அமைச்சரும், சவுதி சுற்றுலா ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான அஹ்மத் அல்-கதீப் ஆணையத்தின் அமைப்பு தொடர்பான விதிகளுக்கு அமைச்சர்கள் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.

உலகளவில் மற்றும் உள்நாட்டில் ஒரு சுற்றுலாத் தலமாகச் சவூதியை முன்னிலைப்படுத்தவும், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவும், 24 கடமைகளை ஒழுங்குமுறை வகுத்து அவற்றில் முக்கியமானதாக, சுற்றுலா தொடர்பான அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து சந்தைப்படுத்தல் அலுவலகங்களை நிறுவுவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஒழுங்குமுறை விதிகளின்படி, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சவூதியில் சுற்றுலா சந்தைப்படுத்தலுக்குத் தேவையான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்து, அதற்குத் தேவையானதை நிறைவேற்றுவதில் அதன் இலக்குகளை அடைய தேவையான அனைத்தையும் அதிகாரம் செய்ய வேண்டும்.

அனைத்து சுற்றுலா தலங்கள், ஓய்வு விடுதிகள், சேவைகள் மற்றும் நிகழ்வுகள் அடங்கிய தரவுத்தளத்தை ஆணையம் உருவாக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்று விதிமுறை கூறுகிறது.

புதிய ஒழுங்குமுறையின்படி, அதிகாரசபையானது சுற்றுலா சந்தைப்படுத்தலை ஆதரிக்கும் ஊடகத் திட்டங்களை உருவாக்கிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சவூதிக்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படுத்தி, சவூதி அரேபியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுலா மன்றங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து அவற்றில் பங்கேற்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!