கடந்த 2013 முதல் 2022 வரையிலான பத்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் போக்குவரத்து விபத்து இறப்பு விகிதம் 40 சதவீதம் குறைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
2013ஆம் ஆண்டில் 7,000க்கும் அதிகமான இறப்புகள் மற்றும் 39,000 காயங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சவூதி சாலைகளில் விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 4,555 ஆகவும், 24,000 க்கும் அதிகமான காயங்களும் குறைந்துள்ளது என்றும், சவூதி அரேபியா 2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை 50 சதவிகிதம் குறைக்கும் உலகளாவிய இலக்கை நெருங்கி வருகிறது என்றும் அறிக்கை காட்டுகிறது.
போக்குவரத்து பாதுகாப்பு மந்திரி குழு (MCTS) அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பகுதி எமிரேட்களில் உள்ள போக்குவரத்து பாதுகாப்புக் குழுக்கள் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மேம்பட்ட பொறியியல் வழிமுறைகளைச் செயல்படுத்தி பாதுகாப்புத் தேவைகளை வழங்குவதால் கடுமையான போக்குவரத்து விபத்துகளின் விகிதம் குறைகிறது.
சாலை பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஏழு அமைச்சகங்களுக்கு இடையே நிர்வாகம், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிர்வகிக்கப் போக்குவரத்து பாதுகாப்பு மந்திரி குழு (MCTS) நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளை உருவாக்கி, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உயர்த்துவதில், சாலை பாதுகாப்பு மற்றும் பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதில் சவூதி அரேபியா வெற்றி பெற்றுள்ளது.





