துறைமுகத்தின் வாயிலாகச் சவுதி அரேபியாவிற்கு வருகைதந்த வாகனம் ஒன்றில் கடத்தி எடுத்துவரப்பட்ட 114,973 கிலோகிராம் ஹஷிஷ் எனப்படும் கஞ்சா வகைப் பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகக் காலி குவார்ட்டர் துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) அறிவித்துள்ளது.
காலி குவாட்டர் கிராசிங் வழியாக வந்த வாகனத்தைச் சோதனை செய்த போது, வாகனத்தின் டிக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அளவு ஹாஷிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சுங்கக் கட்டுப்பாட்டைக் கடுமையாக்குவது தொடரும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. இது அனைத்து கடத்தல் முயற்சிகளையும் எதிர்த்துப் போராடும் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது.
சமூகம் மற்றும் தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காகக் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு, பாதுகாப்பு அறிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட எண் 1910 ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் 1910@zatca.gov.sa என்ற மின்னஞ்சல் அல்லது 00966114208417 என்ற சர்வதேச எண்ணுக்கும் தொடர்பு கொள்வதன் மூலம் கடத்தல்களை தடுக்கலாம் என்றும் இதனைப் பயன்படுத்தி ஆணையத்திற்கு தகவல் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.