Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவின் வளர்ச்சி முயற்சிகளை வியட்நாமில் எடுத்துரைத்த SFD.

சவூதி அரேபியாவின் வளர்ச்சி முயற்சிகளை வியட்நாமில் எடுத்துரைத்த SFD.

163
0

வியட்நாமில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கருத்தரங்கில் சவூதி அரேபியாவின் வளர்ச்சி முயற்சிகளைச் சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட் (SFD) எடுத்துரைத்தது.

இந்நிகழ்வில் SFD CEO Sultan Bin Abdulrahman Al-Marshad, வியட்நாமுக்கான சவூதி அரேபியாவின் தூதர் முகமது தஹ்லவி மற்றும் வியட்நாமிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். வியட்நாமிய திட்டமிடல் மற்றும் முதலீட்டுத் துறையின் துணை அமைச்சர் டிரான் குவோக் புவாங், நிகழ்ச்சியை நடத்தியதற்காகச் சவுதி தூதரகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள SFDயின் திட்டங்கள் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக SFD இன் CEO குறிப்பிட்டார். 1974 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 100 க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளில் 800 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை SFD ஆதரித்துள்ளது.

2011 முதல் SFD மூலம் பயனடைந்த நாடுகளில் வியட்நாம் ஒன்றாகக் கருதப்படுகிறது. வியட்நாமிற்கான சவூதி நிதியத்தின் ஆதரவு பல்வேறு துறைகளில் 12 வளர்ச்சி திட்டங்களை எட்டியுள்ளது, இந்தத் திட்டங்களுக்கு நிதி வழங்கிய கடன்களின் மதிப்பு 164 மில்லியன் டாலராகும் என்பது முக்கியத்துவமானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!